என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம்பெண் மரணம்"
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மீனாட்சி அம்மாள் (வயது 69). இவரது மகள் இசக்கியம்மாள். முன்னீர்பள்ளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இசக்கியம்மாள் தனது தாய் மீனாட்சி அம்மாளின் செல்போனுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் நேரில் வந்து பார்த்த போது மீனாட்சி அம்மாள் வீட்டு பாத்ரூமில் எர்த் வயரை தொட்டப்படி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வத்தலக்குண்டு அருகே கே.உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார். விவசாயி. இவருக்கும் பாண்டி மகள் ஐஸ்வர்யா(வயது19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி உச்சபட்டியில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என செல்போனில் பேசியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி மற்றும் அவரது மனைவி விரைந்து சென்று மகளை பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கணவன் வீட்டார் கூறியுள்ளனர். எங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பாண்டி விருவீடு போலீசில் புகார் அளித்தார்.
வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வழக்குபதிவு செய்து தலைமறைவான சரத்குமாரை தேடி வருகின்றனர்.
ஐஸ்வர்யா உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்முடிவு வந்தபிறகே கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #tamilnews
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உப்புவாடை பகுதியை சேர்ந்தவர் மாது. கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவள்ளி (வயது 28). இவர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.
இந்த நிலையில் அம்சவள்ளி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். இதனால் அவர் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று பரிசோதித்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என கேட்டறிந்து வந்தார். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் தேவையான ஊட்டச்சத்துக்களும் எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அம்சவள்ளிக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. காலை 9 மணிக்கு அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உறவினர்கள் அழைத்து சென்று ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து வலியால் அலறி துடித்தார். இரவு 11 மணி அளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகம் ஏற்பட்டு, மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் பதறியபடி ஆஸ்பத்திரியில் இருந்த நர்சுகளிடம் அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகமாகி மயங்கி கிடக்கிறார். எனவே அவருக்கு உடனடியாக சிகிச்சை அளியுங்கள் என்று தெரிவித்தனர்.
ஆனால், பணியில் இருந்த அந்த நர்சுகள், அலட்சியமாக எங்களுக்கு எல்லாம் தெரியும். இங்கு கூட்டம் கூடக்கூடாது. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறி வெளியே அனுப்பினர்.
இதனால் ஆஸ்பத்திரி வெளியே வரண்டா பகுதியில் கணவரும் மற்றும் அம்சவள்ளியின் பெற்றோரும், உறவினர்களும் சோகத்துடன் இருந்தனர்.
இந்த நிலையில் அம்சவள்ளியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்ததும் அதிகாலை 3 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அம்சவள்ளியை ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அம்சவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார். எனவே அவரது உடலை உங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி சேலத்தில் இருந்து இலவச அமரர் ஊர்தி வாகனத்தில் அம்சவள்ளி உடல் ஆத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையறிந்த கணவர் மாது மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு வாகனம் வந்ததும், அதன் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமல் பிணத்துடன் அமரர் ஊர்தி வாகனம் அங்கேயே நின்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாது கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனது மனைவி சாவுக்கு பணியில் இருந்த டாக்டர்களும், ஊழியர்களும் தான் காரணம். அவர்களது அலட்சிய போக்கினால் தான் எனது மனைவி இறந்துள்ளார். உடனடியாக கவனித்து, உரிய சிகிச்சை அளித்திருந்தால், காப்பாற்றப்பட்டு இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளதோ? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இருப்பினும் தொடர்ந்து பிணத்துடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஜோசப் மகள் சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது சத்தியமேரி பெற்றோர் வரதட்சணையாக மகிமைதாசுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மகிமைதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி மனைவியிடம் மகிமைதாஸ் ரூ.1 லட்சம் கேட்டார். அவரும் தன்னுடைய பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், அந்த பணத்தையும் குடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.
இது பற்றி சம்பவத்தன்று சத்தியமேரி மகிமைதாசிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகிமைதாஸ் சத்தியமேரியை தாக்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சத்தியமேரி சற்று நேரத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் ஆரோக்கியமேரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த சத்தியமேரி உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இது பற்றி ஆரோக்கியமேரி தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்தும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மரையூர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (29) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆர்த்திக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று ஆர்த்தியின் வீட்டுக்கு அவரது தந்தை கலியபெருமாள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆர்த்தி பிணமாக கிடந்தார். இதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஆர்த்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலியபெருமாள் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் ‘தனது மகள் ஆர்த்தி சாவில் மர்மம் உள்ளது. இதை விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வரதட்சணை பிரச்சினையால் ஆர்த்தி இறந்தாரா? என்று மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ஆண்டிப்பட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்த ராமசாமி மகள் முத்துமணி. மனநலம் பாதிக்கப்பட்டவர். தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு முத்துமணி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடும்பாறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் கோம்பைத் தொழு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் முத்துமணி பிணமாக மிதந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்துமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கதை சேர்ந்தவர் முத்து. லாரி டிரைவர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கடந்த 22-ந் தேதி மதியம் இறந்த நிலையில் ஹேமலதாவின் உடலை ஒரு வாலிபர் மேல்பட்டாம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹேமலதா தந்தை முத்துவிடம் ஹேமலதா எப்படி இறந்தார், உடலை வைத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.
அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தது.
ஹேமலதா பகண்டை பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரை நடுவீரப்பட்டு கோவிலில் கல்யாணம் செய்துகொண்டார். பின்னர் காத்தவராயனுடன் ஹேமலதா கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு தனியார் விடுதியில் ஹேமலதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு ஹேமலதா உடலை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை முத்து வீட்டில் வைத்து விட்டு காத்தவராயன் சென்று விட்டார் என்று தெரிந்தது.
ஹேமலதா வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தவராயனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த புள்ளமங்கலம் ஊராட்சி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது27). தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (22). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. கணவர் ஸ்ரீகாந்த் கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோட்டூர் 3-ம் சேத்தியில் வசிக்கும் கோகிலாவின் பெரியப்பா வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ஸ்ரீகாந்த், கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். அவர்களை அடிக்கடி சமாதானம் செய்து வந்தோம். இந்தநிலையில் கோகிலா இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் கோகிலா மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் வடபாதிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்